தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிர ஆலோசனை!

மதுரை, செப். 14:

மதுரை உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) முனைவர் மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ் இன்று மதுரையில் நேரில் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார்.

மதுரைக்கு வருகை தந்த டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. எஸ். ராஜேந்திரன், ஐபிஎஸ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வரும் செப்டம்பர் 17 அன்று நடைபெற உள்ள மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு வளையம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், மதுரை மாநகர காவல்துறையின் பல்வேறு தொடர் காவல் பணிகள், மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் நடை ரோந்து (Foot Patrolling) மேற்கொள்வது உள்ளிட்ட குற்றத் தடுப்பு முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அதிகாரிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன