தேசியம்

₹2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுதில்லி: ரூ.2,000 வரையிலான யுபிஐ (UPI) மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிக்கையை (Gazette Notification) வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில், ரூ.2,000 வரையிலான தொகையை யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும்போதோ அல்லது ரூபே இயங்குதள டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போதோ வங்கிகளோ அல்லது பிற சேவை வழங்கும் அமைப்புகளோ எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பயனாளிகள் மற்றும் பணத்தைப் பெறும் வணிகர்கள் உள்ளிட்ட யாரிடமிருந்தும் எவ்வித நேரடி அல்லது மறைமுக கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை சாமானிய மக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன