புதுச்சேரி
ஏனாமில் 1.25 கிலோ எடையுள்ள அரிய வகை புளூசா மீன் ₹15,000-க்கு ஏலம்
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் கோதாவரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய 1.25 கிலோ எடையுள்ள அரிய வகை புளூசா மீன் ஏலத்தில் ₹15,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இனப்பெருக்கத்திற்காக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடலிலிருந்து கோதாவரி ஆற்றின் முகத்துவார பகுதிக்கு வரும் இம்மீன் அதன் தனித்துவ சுவையால் மீன்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. வழக்கமாக ரூ. 30,000 வரை ஏலம் போகும் இம்மீன், இந்த ஆண்டு மழைப் பொழிவு குறைவால் வரத்து குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தினம் என்ற வியாபாரி இம்மீனை ஏலத்தில் எடுத்தார்.
In brief (English)
A rare 1.25 kg Pulasa fish caught in the Godavari river at Yanam was auctioned for ₹15,000 to a local fish vendor.
