புதுச்சேரி

புதுச்சேரியில் 1.7 கிலோ கஞ்சா பறிமுதல்: 13 வழக்குகள் பதிவு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குளோத்துங்கன் தலைமையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை சார்பில் 1.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் மருந்துகளில் காலாவதியான பொருட்களை ஆய்வு செய்தல் மற்றும் கடலோர கண்காணிப்புகளை தீவிரப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் எஸ்.பி கலைவாணன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

In brief (English)

Puducherry officials seized 1.7 kg of ganja and registered 13 cases during recent anti-narcotics enforcement drives across the region.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *