புதுச்சேரி

புதுச்சேரியில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

புதுச்சேரி, செப். 15:
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி மாநில திமுக சார்பில் நடைபெற்ற இந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், கட்சியின் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி அண்ணாவின் புகழைப் போற்றினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வே. கார்த்திகேயன், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா சரவணன், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேதுசெல்வம், துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம்.பி. லோகையன், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், ந. தங்கவேலு, பெ. வேலவன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன