தேசியம்

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் எழுதிய ஆர்.எஸ்.எஸ். சேவைப் பணிகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார் குடியரசு துணைத் தலைவர்!

புதுதில்லி:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு கால சமூக சேவை மற்றும் தேசக் கட்டமைப்பு பங்களிப்புகளை விவரிக்கும் வகையில், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் எழுதிய புதிய நூல் தலைநகர் புதுதில்லியில் வெளியிடப்பட்டது.

“A Century of Service – 100 Years of the RSS in 100 Acts of Seva” என்ற தலைப்பிலான இந்நூலை, புதுதில்லியில் உள்ள உபராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் முறைப்படி வெளியிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூகப் பொறுப்புணர்வு, தேச நலனுக்கான அர்ப்பணிப்பு மற்றும் கடந்த நூறு ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட நூறு முக்கிய சேவைப் பணிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இந்நூலைத் தொகுத்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன