தமிழ்நாடு

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்புமனு தாக்கல்!

மதுராந்தகம், செப். 15: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி K. மரகதம் குமரவேல், செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். தியாகராஜன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. B. விஜயராஜ், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜே. காமாட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.S. பாலாஜி (எ) மணிகண்டன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S. குமரவேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன