புதுச்சேரி

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளை: மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரத்யேக கிளையை நிறுவ வேண்டும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள மத்திய சட்ட அமைச்சக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை சந்தித்த அவர், புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான உயர்நீதிமன்ற கிளை அமைப்பது தொடர்பான விவகாரங்களை விரிவாகக் கலந்தாலோசித்தார்.

தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்குகளுக்காக வழக்கறிஞர்களும், பொதுமக்களும் சென்னைக்கு நேரில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் புதுச்சேரியிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட்டால் வழக்குகளின் விசாரணை துரிதமடைந்து பொதுமக்களுக்கு விரைவான மற்றும் எளிமையான நீதி கிடைக்கும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார். இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன