போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தை குப்பைக் கிடங்காக மாற்றக் கூடாது: சௌமியா அன்புமணி கடும் கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகப் பகுதியை குப்பைக் கிடங்காகப் பயன்படுத்துவதற்கு பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போச்சம்பள்ளி சிப்காட் தொழிற்பேட்டை வளாகமானது தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால், அப்பகுதியை பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தும் வகையில் குப்பைக் கிடங்காக மாற்றி வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குற்றம்சாட்டினார்.
மேலும், இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இதில் தலையிட்டு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



