புதுச்சேரி
நலவாடு கடற்கரையில் குளித்த கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி மாயம்
புதுச்சேரி கரியமாணிக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் பேரரசு, தனது நண்பர்களுடன் தவளக்குப்பம் அருகிலுள்ள நலவாடு கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்துள்ளார். அப்போது எழுந்த ராட்சச அலையில் சிக்கி பேரரசு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மீனவர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதாகக் கூறி சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பகுதியில் பரபரப்பு நிலவியது.
In brief (English)
A 19-year-old college student went missing after being swept away by a huge wave while bathing with friends at Nallavadu beach.
