புதுச்சேரி
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து ஏலம் விடப்படும்: உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் ஐயாவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் நேர்வதை தடுக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். வளர்ப்பு மாடுகளை பொது இடங்கள் மற்றும் சாலைகளில் திரியவிடாமல் உரிமையாளர்கள் தங்களது சொந்த இடத்தில் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். மீறி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அபராதம் விதிப்பதுடன் உரிமையாளர்களிடம் அவை மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
In brief (English)
Oulgaret Municipality has issued a stern warning to cattle owners that stray livestock on public roads will be impounded and heavy fines will be imposed.
