புதுச்சேரி

குயவர்பாளையம் புட்டலாயம்மன் ஆலயத்தில் 9ஆம் ஆண்டு நவராத்திரி பெருவிழா மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சி

புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி குயவர்பாளையம் செல்லப்பெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புட்டலாயம்மன் ஆலயத்தின் 9ஆம் ஆண்டு நவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய இத்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டதுடன் கன்னியா பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து துர்க்கை அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டதுடன் பிரசாதம் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சாமி திருவீதி உழா ஆலய வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை புட்டலாயம்மன் ஆலய நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன