புதுச்சேரி

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் தசரா விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாட்டம்

புதுச்சேரி, அக்டோபர் 21: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் லயம் கலைக்கூடம் சார்பில் ஐந்தாம் ஆண்டு நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவை தனலட்சுமி சாமிநாதன் குடும்பத்தினர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி இன்னர்வீல் கிளப் தலைவி சுமிதா மற்றும் உறுப்பினர்கள் ராமன், பொதுப்பணித்துறையை சேர்ந்த கோட்டைமேடு ரமேஷ், பெஸ்ட் பிரண்ட்ஸ் குழு சரவணன், ஜேசிஐ சரவணன், ரஜினி முருகன், பரசுராமன், அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதல்களை வழங்கி பாராட்டினர். 10 நாட்கள் நவராத்திரி விழாவை சிறப்பாக நடத்திய லயம் கலைக்கூட இயக்குனர் லயம் அன்பு ஜெகனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

விழாவில் ஸ்ரீ ரஞ்சனி நித்தியார்பணம் சார்பில் டாக்டர் அன்பரசி ஆனந்தன் குழுவினரின் நாட்டியம், லயம் கலைக்கூடம் அன்புஜகன் குழுவினரின் சிலம்பாட்டம், விழுப்புரம் மாவட்டம் கோழியனூர் சிவன்யார் நாட்டியாலயா கஜலட்சுமி குழுவினரின் நாட்டியம் மற்றும் மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலை பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை லயம் கல்ச்சுரல் அகாடமி இயக்குனர் லயம் அன்பு ஜெகன் செய்திருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன