தமிழ்நாடு

கோவையில் சாலையில் திடீரென சாய்ந்து விழுந்த மரம் மூன்று பேர் உயிர் தப்பினர்

கோயம்புத்தூர், அக்டோபர் 21: கோவையில் ஆர்எஸ்புரம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை மற்றும் காற்றின் காரணமாக சாலையில் பெரிய மரம் திடீரென சாய்ந்து விழுந்தது.

அப்போது அருகில் உள்ள கடையிலிருந்து வெளியே வந்த மூவர், மரம் விழுவதை கண்டு உடனடியாக பின்னோக்கி ஓடியதால் பெரும் விபத்தில் இருந்து நூலிடையில் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன