தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு
சென்னை, அக்டோபர் 21: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய கிராம ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைப்பது மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.