புதுச்சேரி
உருளையன்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் விஜயதசமி அம்பு உற்சவம் மற்றும் வீதி உலா
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன் நிறைவு விழாவாக விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இத்திருக்கோவிலில் அம்பு உற்சவம் நிகழ்ச்சியும், அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவினை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான நேரு என்கிற குப்புசாமி தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகிகளும், நேயம் மக்கள் கழக நிர்வாகிகளும் மற்றும் பகுதி பொதுமக்களும் பலரும் கலந்து கொண்டனர்.