புதுச்சேரி

புதுச்சேரியில் கனகசெட்டிகுளம் பகுதியில் பத்தாம் ஆண்டு நவராத்திரி கொலு

புதுச்சேரி, அக்டோபர் 20: புதுச்சேரி கனகசெட்டிகுளம் அம்மன் நகர் பகுதியில் தம்பதியினர் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள பத்தாம் ஆண்டு நவராத்திரி கொலு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுச்சேரி கனகசெட்டிகுளம் அம்மன் நகரில் வசிக்கும் பாலமுருகன் – சரளா தம்பதியினர் தங்களது இல்லத்தில் தொடர்ந்து பத்தாம் ஆண்டாக நவராத்திரி கொலு அமைத்துள்ளனர். ஒன்பது படிகளாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இந்த கொலுவில், முதல் படியில் புல், பூண்டு உள்ளிட்ட ஓரறிவு உயிரினங்களை குறிக்கும் வகையிலான அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து பல்வேறு படிகளில் தன்வந்திரி, பெருமாள், துர்க்கை, சரஸ்வதி, விநாயகர், லட்சுமி, ஹயகிரீவர் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் அழகாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. வண்ணமயமான அலங்காரங்களுடன் பாரம்பரியம் மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கொலுவை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன