புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

புதுச்சேரி, அக்டோபர் 20: புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் என். ரங்கசாமி பங்கேற்று தீபாராதனை காட்டி சுவாமி தரிசனம் செய்தார். பூஜைகளில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் சிவக்கொழுந்து, ராஜவேலு, ராஜசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பூஜைகளைத் தொடர்ந்து அனைவருக்கும் தாம்பூலம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் மற்றும் அமைச்சர் அலுவலகங்களில் நடைபெற்ற பூஜைகளிலும் கலந்துகொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன