புதுச்சேரி

புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் தவறவிட்ட ஸ்மார்ட்போன் மற்றும் பணம் மீட்பு

புதுச்சேரி, அக்டோபர் 20: புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் சுற்றுலா பயணிகள் தவறவிட்ட ஸ்மார்ட்போன் மற்றும் பணத்தை கடலோர காவல் நிலைய காவலர்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தபோது தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அங்கு அவர்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மற்றும் பையையும் தவறவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொண்ட கடலோர காவல் நிலைய காவலர்கள் அவற்றை மீட்டு பத்திரமாக உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

தவறவிட்ட செல்போன் மற்றும் பணத்தை மீட்டு கொடுத்த காவலர்களுக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு கடலோர காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் பாராட்டுக்களை தெரிவித்தார் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன