புதுச்சேரி

பட்டானூர் பகுதியில் 40.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறுபாலம் திறப்பு

புதுச்சேரி, அக்டோபர் 20: பட்டானூர் வசந்தபுரம் மற்றும் நர்மதா நகர் பகுதியில் ரூபாய் 40.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சிறுபாலத்தை சட்டமன்ற உறுப்பினர் கௌதம் திராவிடமணி திறந்து வைத்தார்.

திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டானூர் பகுதியில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நமக்கு நாமே திட்டம் 2025-26 கீழ் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. வசந்தபுரம், நர்மதா நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும். குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள் குறைவதுடன், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் எளிதாக சென்று வர இந்த பாலம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் ஆர். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கௌதம் திராவிடமணி, சேர்மன் உஷா, டிகேடி முரளி ஆகியோர் பாலத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன், நகர் நலச்சங்க நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன