தேசியம்
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையிலான நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், வங்கிகளுக்கான ரெப்போ கடன் வட்டி வீதம் 5.25 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ மாறும் வாய்ப்பில்லை. மேலும், பிளாஸ்டிக் அடிப்படையிலான நீண்ட காலம் உழைக்கக்கூடிய புதிய ரூபாய் தாள்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
In brief (English)
The Reserve Bank of India maintained its key interest rate at 5.25 percent and announced plans to introduce plastic currency notes next year.