4 மாநில சட்ட மேலவை பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதி தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி, செப். 22:
பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சட்ட மேலவைகளின் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான ஈராண்டு தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பீகார் சட்ட மேலவையில் 4 பட்டதாரிகள் மற்றும் 4 ஆசிரியர்கள் தொகுதிகள் உட்பட 8 உறுப்பினர்கள், கர்நாடகாவில் 2 பட்டதாரிகள் மற்றும் 2 ஆசிரியர்கள் தொகுதிகள் என 4 உறுப்பினர்கள், மகாராஷ்டிராவில் 3 பட்டதாரிகள் மற்றும் 2 ஆசிரியர்கள் தொகுதிகள் என 5 உறுப்பினர்கள், உத்தரப் பிரதேசத்தில் 5 பட்டதாரிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் தொகுதிகள் என மொத்தம் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இந்த தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பாட்னா, தர்பங்கா, திர்கூத், கோசி ஆகிய பட்டதாரிகள் தொகுதிகளின் உறுப்பினர்களான நீரஜ் குமார், சர்வேஷ் குமார், பன்சி தார் பிரஜ்வாசி, டாக்டர் என்.கே. யாதவ் மற்றும் பாட்னா, தர்பங்கா, திர்கூத், சரண் ஆகிய ஆசிரியர்கள் தொகுதிகளின் உறுப்பினர்களான நாவல் கிஷோர் யாதவ், டாக்டர் மதன் மோகன் ஜா, சஞ்சய் குமார் சிங், அஃபாக் அஹமது ஆகிய 8 உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 நவம்பர் 16-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இடங்கள் காலியாவதைத் தொடர்ந்து, உரிய விதிமுறைகளின்படி பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்பட்டு தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)




