மானிய விலை சமையல் எரிவாயு பெற பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!
புதுதில்லி:
மானிய விலையிலான வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் ரீஃபில்களைப் பெறுவதற்குப் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் (Biometric Aadhaar Authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எரிவாயு நுகர்வோரில் இதுவரை 27.43 கோடி நுகர்வோர்கள் (89.9 சதவீதம்) தங்களது ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடைமுறையை வெற்றிகரமாக முழுமையாக முடித்துள்ளனர். இவ்வாறு ஏற்கனவே சரிபார்ப்பை முடித்த பயனாளிகள் மீண்டும் எந்தவித சரிபார்ப்பு நடைமுறையையும் செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆதார் சரிபார்ப்பு செய்யாத நுகர்வோர்கள், சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் நேரத்திலோ, தங்களது எரிவாயு விநியோகஸ்தர் விற்பனையகத்திலோ (Showroom) அல்லது எண்ணெய் நிறுவனங்களின் (OMC) அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் மூலமாகவோ இந்த சரிபார்ப்பை எளிதாக செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



