மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் 60 பேருக்கு முற்றிலும் இலவச UPSC பயிற்சி: தகுதித் தேர்வுக்கான பதிவு தொடக்கம்!

சென்னை, 20/09/2024:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் சாதிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில், மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் முற்றிலும் இலவச UPSC பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதித் தேர்வு (Merit Test) மூலம் தகுதியான 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறும் 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த தலைசிறந்த பேராசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகள் மூலம் தீவிரப் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்குத் தனிப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை, வழக்கமான மாதிரி தேர்வுகள் ஆகியவை நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சித் திட்டத்தின் கீழ், 9 மாதங்கள் முதல்நிலைத் தேர்வுக்கான (Prelims) தீவிரப் பயிற்சியும், அதைத் தொடர்ந்து 3 மாதங்கள் முதன்மைத் தேர்வுக்கான (Mains) முழுமையான பயிற்சியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்க ஆர்வம் உள்ள தகுதியுடைய மாணவர்கள் க்யூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய 9488819301 மற்றும் 9751880945 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


