Uncategorized

கொளத்தூர் வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை!

சென்னை, செப். 17:
சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுவாசப் பிரச்னைகள் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், செப்டம்பர் 17 அன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், அவரது உடல்நிலை அளவீடுகள் அனைத்தும் திருப்திகரமாகவும் சீராகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாகவும், பல்துறை சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன