தமிழ்நாடு

5 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: தமிழக அரசு புத்தாக்க நிறுவனம் அறிவிப்பு!

சென்னை, செப். 17:

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில் சென்னையில் ஐந்து நாட்கள் நடைபெறும் நேரடி தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாம் வரும் 21.09.2026 முதல் 25.09.2026 வரை தினசரி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட ஆபரண உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவீட்டு முறைகள், விலை நிர்ணயம் செய்யும் முறை (Board Rate), ஹால்மார்க் மற்றும் போலியான நகைகளை மிகத் துல்லியமாக அடையாளம் காணும் வழிமுறைகள் கற்றுத்தரப்படும். அத்துடன் ஆபரணக் கடன்களுக்கான கணக்கீட்டு முறைகள் மற்றும் நகைகளின் பல்வேறு வகைகள் குறித்து விரிவான செய்முறைப் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிவதற்கான வாய்ப்புகள், அவற்றை அணுகும் வழிமுறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தொழில் கடனுதவித் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் பயிற்றுவிக்கப்படும்.

இப்பயிற்சியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பிய ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் விண்ணப்பிக்கலாம். வெளியூர் பயனாளிகளுக்குக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.editn.in இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் அல்லது 8668100181, 9360221280 ஆகிய தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன