தமிழ்நாடு
தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்: சென்னை அண்ணா சாலையில் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

சென்னை: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவர்களுடன் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கராத்தே ஆர். செல்வம், விஜய தணசேகர் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று தந்தை பெரியாரின் சமூகநீதிப் பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.



