தந்தை பெரியார் பிறந்த நாள்: புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் மரியாதை

புதுச்சேரி, செப். 17:
தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில் பிள்ளைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழியையும் திமுகவினர் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, முன்னாள் எம்எல்ஏ நந்தா சரவணன், துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் பெ. வேலவன், எஸ். அமுதாகுமார், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், கழகத் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


