தமிழ்நாடு

7.5% உள் இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி!

சென்னை: நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மதுரை மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ள மாணவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்துப் பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்த கே.சங்கர் என்பவரது மகள் எஸ்.வீரநிஷா. இவர் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் தேர்ச்சி பெற்று, புகழ்பெற்ற மதுரை மருத்துவக் கல்லூரியில் (Madurai Medical College) மருத்துவம் (MBBS) படிப்பதற்கான சேர்க்கை இடத்தைப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை மாணவி வீரநிஷா நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். மருத்துவராகத் தேர்வாகியுள்ள மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன