அரசியல்

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்கக் கூடாது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: விளம்பர மோகத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, டெல்டா விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணமும், முழு பயிர்க்கடன் தள்ளுபடியும் உடனடியாக வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு செவிமடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். போதிய நீர் இருப்பு இல்லாத சூழலில், விளம்பரத்திற்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே அணை திறக்கப்பட்டதால், தற்போது நீர்வரத்து 4,000 கன அடியாக குறைந்து, நீர்மட்டம் 40 அடியை நோக்கி சரிந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சென்றடைவதும், பயிர் பூக்கும் தருணத்தில் பாசன நீர் கிடைப்பதும் பெரும் சந்தேகமாகி சம்பா சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வெற்று விளம்பரங்களை விடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடியையும், வறட்சி நிவாரணத்தையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன