புதுச்சேரி

தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் இனி குப்பம் நிலையத்தில் நின்று செல்லும்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆந்திர மாநிலம் குப்பம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான கூடுதல் நிறுத்த சேவையை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயக்கப்படும் ரயில் எண் 11005 / 11006 தாதர் – புதுச்சேரி – தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண் 17315 / 17316 வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ஆகிய முக்கிய விரைவு ரயில்களுக்கு குப்பம் ரயில் நிலையத்தில் புதிய நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுத்த சேவையை குப்பம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆந்திர அரசு கொறடாவும் சட்டமேலவை உறுப்பினருமான காஞ்சர்லா ஸ்ரீகாந்த், சித்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்குமல்ல பிரசாத் ராவ், தென்மேற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஏ.ஜி. ஸ்ரீனிவாஸ், பெங்களூரு ரயில்வே கோட்ட மேலாளர் அசுதோஷ் குமார் சிங் மற்றும் மூத்த ரயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூடுதல் நிறுத்தத்தின் மூலம் குப்பம் பகுதி மக்களும், புதுச்சேரி மற்றும் வேளாங்கண்ணி நோக்கி பயணிக்கும் பயணிகளும் பெரிதும் பயனடைவர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன