புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்கு எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.அழகு பிறந்தநாள் வாழ்த்து!

புதுச்சேரி: அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபாலின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு @ அழகானந்தம் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி ஆளும் கட்சியான அகில இந்திய என்.ஆர். காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராகப் பணியாற்றி வரும் என்.எஸ்.ஜே. ஜெயபால் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கதிர்காமம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். அழகு @ அழகானந்தம் எம்.எல்.ஏ. அவரை நேரில் சந்தித்துப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர், பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவையைத் தொடர வேண்டும் என வாழ்த்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன