தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: கொட்டும் மழையிலும் வீடு வீடாகச் சென்று எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தீவிர வாக்குச் சேகரிப்பு!
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. சேது (எ) சேது செல்வத்தை ஆதரித்து, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பாரி நகர் மற்றும் முத்துலிங்கம்பேட்டை ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் இந்த தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர்.
அப்போது, திமுக வேட்பாளர் சேது (எ) சேது செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இப்பிரச்சார நிகழ்வில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


