புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: பாஜக நிர்வாகிகள் எழுச்சி!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறங்கும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அவர்களை ஆதரித்து, புதுச்சேரி பாஜக தட்டாஞ்சாவடி தொகுதி சார்பில் சிறப்பு வேட்பாளர் அறிமுகக் கூட்டம் உற்சாகத்துடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பாஜக நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளையும், புதுச்சேரி அரசின் மக்கள் நலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்து தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து பூத் வாரியாக களப்பணியாற்றி வேட்பாளர் அசோக் ஆனந்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஒருமனதாக உறுதியேற்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன