ஒப்பந்த விரிவுரையாளர்கள், TGT, பாலசேவிகாக்களை பணி நிரந்தரம் செய்க: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவை நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம், புதுச்சேரி அரசு கல்வி நிறுவனங்களில் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) மற்றும் பாலசேவிகா பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றார். அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைவரையும் காலதாமதமின்றி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார். கல்வித்துறையின் தரம் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் காக்க அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

