புதுச்சேரி

புதுச்சேரி பாரில் பயங்கரம்: பீர் பாட்டிலால் குத்தி இளைஞர் படுகொலை – 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

புதுச்சேரி, செப். 22:
புதுச்சேரி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள தனியார் பாரில் மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், பீர் பாட்டிலால் குத்தப்பட்டு 20 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உள்ள தனியார் மதுபான பாரில் நண்பர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நபர்கள், மதன் (20) என்ற இளைஞரை பீர் பாட்டிலால் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

தாக்குதலில் இருந்து தப்பிக்க மதன் அங்கிருந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற நண்பர்கள் குழு, மொட்டை மாடியில் வைத்து பீர் பாட்டிலால் கொடூரமாகக் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த கோரிமேடு காவல் நிலைய போலீசார், மதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன