தமிழ்நாடு
தமிழகத்தில் தொடரும் மின்தடை: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
மதுரையில் கோச்சடை மற்றும் சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திடீர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ச்சியாக ஏற்படும் மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் மின்தடையும், மின் கட்டண உயர்வுப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனிடையே பொதுமக்கள் புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
In brief (English)
Midnight power cuts in Madurai led to public outcry and criticism from opposition leaders over rising power tariffs and frequent outages in Tamil Nadu.