தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதி விலகல்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கிலிருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மோகனா விலகியுள்ளார். முன்னதாக அவர் இவழக்குகளில் வழக்கறிஞராக ஆஜராகியிருந்ததால் இம்முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனிடையே, குதிரை பேர வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணைகளுக்கு வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்பதால் விலக்கு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
In brief (English)
A Madras High Court judge has recused herself from hearing former minister Senthil Balaji’s bail plea, citing prior involvement as a lawyer in related cases.