தேசியம்
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை சுமார் 5.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்குள் ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தவறினால் ₹5,000 வரை அபராதம் செலுத்த வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை செலுத்த தவறுபவர்களுக்கு அபராத வட்டி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
In brief (English)
Today is the final deadline to file Income Tax returns without penalty, with over 5.5 crore filings completed so far.