புதுச்சேரி

புதுச்சேரியில் மரபு மாமணி முகம்மதலி அப்துல் மஜீத் நூற்றாண்டு விழா: அமைச்சர் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் பங்கேற்பு!

புதுச்சேரி: மரபு மாமணி ஈகி முகம்மதலி அப்துல் மஜீத் அவர்களின் நூற்றாண்டு விழா புதுச்சேரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் நல்வழித்துறை அமைச்சர் மாண்புமிகு சிவக்கொழுந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விழாவில் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பொறுப்புத் துணைவேந்தர் பேராசிரியர் தரணிகரசு மற்றும் புதுவைத் தமிழ்க்கழகத் தலைவர் வெ.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது முகம்மதலி அப்துல் மஜீத் அவர்களின் அளப்பரிய தியாகங்கள், மரபுசார்ந்த தொண்டுகள் மற்றும் சமுதாயப் பங்களிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நூற்றாண்டு விழா தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன