காரைக்கால்

கோட்டுச்சேரிமேடு, காளிக்குப்பத்தில் புதிய தார் சாலை பணிகள்: எம்.எல்.ஏ. டாக்டர் வி. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு!

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரிமேடு மற்றும் காளிக்குப்பம் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் மருத்துவர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் எம்.பி.பி.எஸ். நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தரமான புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கள ஆய்வின் போது பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடமும் பணியாளர்களிடமும் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர், பணிகளை விரைவாகவும் செம்மையாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசிய அவர், நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து விளக்கினார். மேலும் பொதுமக்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், தொகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன