தமிழ்நாடு
கோவையில் ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் ஊழியர்கள் நியமனம் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
சென்னை, அக்டோபர் 20: மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்கள் இனி டெண்டர் அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே 2,600 பேர் நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் மேலும் 2,400 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். ஊழியர்கள் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 5,000 பேர் எடுப்பதற்கான ஒப்புதல் ஒரு மாதத்திற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முந்தைய காலங்களில் உள்ளூரில் ஆட்களை எடுத்த நிலையில், இனி அப்படி செய்யக்கூடாது எனவும், அந்தந்த சர்க்கிள் வாரியாக டெண்டர் மூலமே ஒப்பந்த பணியில் ஆட்களை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.