புதுச்சேரி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜையை ஒட்டி ஓலைச்சுவடிகளுக்கு பாவன அபிஷேகம்

காரைக்கால், அக்டோபர் 20: காரைக்காலை அடுத்துள்ள உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

நவராத்திரியை ஒட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓலைச்சுவடிகள் மற்றும் புத்தகங்களுக்கு பாவன அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரவிய பொடிகள், பால் மற்றும் சந்தனம் கொண்டு பாவன அபிஷேகம் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற மகாதீபாராதனையில் தருமபுர ஆதீனம் ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன