புதுச்சேரி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விக்னேஷ் கண்ணன் கோரிக்கை

புதுச்சேரி, அக்டோபர் 20: பருவமழை தொடங்கும் முன்பு கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாராதது கண்டிக்கத்தக்கது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் உள்கட்டமைப்பு பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை அவர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் கண்ணன், காலநிலை மாற்றத்தால் மழை அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பருவமழைக்கு முன்பு நகரப் பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் வாய்க்கால்களும் தூர்வாரப்பட வேண்டும் என்று தெரிவித்தார். சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நகரப் பகுதி முழுவதும் வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், வாழைக்குளம், கணேஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய அதிகாரிகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன