புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் நேரில் ஆய்வு!

புதுச்சேரி, மே. 20:

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனைக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல், அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் சேவைகள் மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் இயங்கி வரும் பல்வேறு சிகிச்சை பிரிவுகள், நோயாளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவக் கல்லூரியின் விலங்கு ஆராய்ச்சி வசதிகள் (Animal Research Facilities) உள்ளிட்டவற்றை அமைச்சர் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடிய அவர், மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை தடையின்றி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன