புதுச்சேரி

புதுச்சேரியில் எச்2 கேப் சர்வீஸ் ஆப் அறிமுகம் மற்றும் விபத்து காப்பீடு

புதுச்சேரி, அக்டோபர் 20: புதுச்சேரி உதவும் கரங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில் எச்2 கேப் சர்வீஸ் ஆப் அறிமுக விழா மற்றும் ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீட்டு ஆவணங்கள் வழங்கும் விழா முருகா திரையரங்கம் அருகே உள்ள மார்க்கெட் கமிட்டி திடலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோகானந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி எச்2 கேப் சர்வீஸ் ஆப்பை தொடங்கி வைத்து அறிமுகப்படுத்தினார்.

விழாவின் ஒரு பகுதியாக ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விபத்து காப்பீட்டு ஆவணங்கள் வழங்கப்பட்டன. ஓட்டுநர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதவும் கரங்கள் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன