புதுச்சேரி

உடையார் தோட்டம் ஏழை முத்து மாரியம்மன் கோயிலில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி

புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட உடையார் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சியும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இக்கோவிலில் இரண்டாவது ஆண்டாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆலய வளாகத்தில் பல்வேறு சாமிகளின் கொலு பொம்மை கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

பத்தாவது நாளாக நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பரதநாட்டிய கலைஞர் நந்தினி தலைமையில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் நிறைவாகப் பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்குக் கோவில் நிர்வாகிகள் சால்வை அணிவித்துச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோவில் தலைவர் குணாளன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் சரவணன், துணைத் தலைவர் முனியாண்டி, துணைச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன