தமிழ்நாடு
திருச்சி அருகே கடும் வறட்சி: கருகும் பயிர்களைக் காப்பாற்ற குடங்களில் நீர் ஊற்றி விவசாயிகள் போராட்டம்
திருச்சி மாவட்டம் முசிரி அருகே பருவமழை பொய்த்ததாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததாலும் விவசாய நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பல மாதங்களாக வளர்த்த மரவள்ளி மற்றும் கரும்புச் செடிகள் காய்ந்து கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள செடிகளைக் காப்பாற்றுவதற்காக ஆழ்துளைக் கிணற்று நீரை விவசாயிகள் குடங்கள் மற்றும் பாத்திரங்களில் சுமந்துவந்து ஒவ்வொரு செடியாக ஊற்றி வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உரிய ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
In brief (English)
Farmers in Trichy district are carrying groundwater in pots and vessels to manually water their drying crops following a severe drought. They have requested the government to inspect the damage and provide relief.