புதுச்சேரி
ஜூலை 30 தொழிலாளர் தியாகிகள் தினம்: புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் வீரவணக்கம்
1936 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி புதுச்சேரியில் 8 மணி நேர வேலை மற்றும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். பிரெஞ்சு அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தியாகிகளின் நினைவாக கடலூர் சாலை நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள நினைவிடத்தில் ஆண்டுதோறும் ஜூலை 30 வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில், திருபுவனை மற்றும் சேதராப்பட்டு தொழிற்பேட்டை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் தியாகிகள் சிலைக்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
In brief (English)
Trade union leaders and industrial workers in Puducherry paid homage at the martyrs’ memorial to commemorate the 12 workers killed in 1936 while fighting for an 8-hour workday.