புதுச்சேரி

வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு வலியுறுத்தல்

புதுச்சேரி வில்லியனூர் மார்க்கெட் வீதியில் உள்ள அரிசி கடையை குறிவைத்து மாமூல் கேட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதல் வியாபாரிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளதை வரவேற்பதாக கூறியுள்ள அவர், இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க கடுமையான தொடர் நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தினார். மேலும், வியாபாரிகள் அச்சமின்றி தங்களது தொழிலை நடத்த புதுச்சேரி அரசும் காவல்துறையும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

In brief (English)

The Puducherry Traders Federation has urged the government and police to ensure full security for shopkeepers following the petrol bomb attack on a rice store in Villianur.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன